Boeing 737 MAX விமானம் மீண்டும் சேவையில்

Boeing 737 MAX விமானம் மீண்டும் சேவையில்

அமெரிக்காவின் Boeing நிறுவனம் தயாரிக்கும் 737 MAX வகை விமானம் ஒன்று நேற்று புதன் அமெரிக்காவின் Texas மாநிலத்தில் உள்ள Dallas விமான நிலையத்தில் இருந்து அருகே உள்ள Oklahoma மாநிலத்தில் உள்ள Tulsa நகர் வரை பறந்து உள்ளது. சுமார் 45 நிமிட மேற்படி American Airlines பயணம் நிருபர்கள் உட்பட தெரிவு செய்யப்பட்ட சிலருடன் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது.

இந்த மாதம் 29 ஆம் திகதி முதல் American Airlines ஒரு 737 MAX விமானத்தை தினசரி சேவை ஒன்றில் ஈடுபடுத்த தீர்மானித்து உள்ளது. தினமும் ஒரு 737 MAX விமானம் மூலமான சேவை Miami – New York – Miami சேவையில் ஈடுபடும்.  பயணிகள் 737 MAX விமானத்தில் பறக்க மறுத்தால் அவர்களுக்கு வேறு விமானத்தில் ஆசனங்கள் வழங்கப்படும் என்று American Airlines கூறியுள்ளது.

உலக அளவில் அனைத்து 737 MAX விமானங்களும் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டு இருந்தன. இந்த புதிய வகை விமானங்கள் இரண்டு வீழ்ந்து விபத்துக்கு உள்ளானதால் 346 பேர் பலியாகி இருந்ததே காரணம். விபத்துக்கு உள்ளன விமானங்களில் ஒன்று இந்தோனேசிய விமான சேவைக்கும் (189 பேர் பலி), மற்றையது எதியோபியன் விமான சேவைக்கும் (157 பேர் பலி) சொந்தமானவை.

737 MAX விமான கட்டமையில் இருந்த குறைபாடே விபத்துகளுக்கு காரணமாக இருந்தன. அக்குறைபாடு தற்போது நிவர்த்தி செய்யப்பட்டு உள்ளதாக அமெரிக்க அரசின் FAA (Federal Aviation Administration) சான்றிதழ் வழங்கி உள்ளது. ஆனாலும் மற்றைய நாடுகள் தம்மிடம் உள்ள 737 MAX விமானங்கள் மீண்டும் சேவைக்கு விடும் தீர்மானத்தை இதுவரை எடுக்கவில்லை.

737 MAXவிமானத்தில் உள்ள MCAS (எம்-காஸ்) என்ற பாகம் தவறான வாசிப்புக்களை கொண்டிருந்ததாலேயே இரண்டு விமானங்களும் விபத்துக்கு உள்ளாகின.