Boeing MAX 8 பாதிப்பால் பயனடையும் Airbus

737MAX8

இந்தோனேசியாவிலும், எதியோப்பியாவிலும் இரண்டு புதிய Boeing 737 MAX 8 வகை விமானங்கள் வீழ்ந்து நொறுங்கியதை தொடர்ந்து அனைத்து MAX 8 விமானங்களும் சேவைகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டன. Boeing என்ற அமெரிக்க தயாரிப்பு நிறுவனத்தின் இந்த விமானங்களுக்கான திருத்தங்கள் தொடர்ந்தும் இழுபடுவதால், ஐரோப்பிய விமான தயாரிப்பு நிறுவனமான Airbus பெரும் பயனை அடைகிறது.
.
ஆகஸ்ட் மாதம் முதலிருந்தான 3 மாத காலத்தில் Airbus விமான தயாரிப்பு நிறுவனம் மொத்தம் 350 விமானங்களை ஆசியாவில் மட்டும் விற்பனை செய்துள்ளது. இந்தியாவின் IndiGo விமான சேவை மட்டும் சுமார் $33 பில்லியன் பெறுமதியான 300 Airbus விமானங்களை கொள்வனவு செய்ய இணங்கி உள்ளது.
.
இதேகாலத்தில் அமெரிக்காவின் Boeing விமான தயாரிப்பு நிறுவனம் 16 விமானங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.
.
பல விமான சேவைகளுக்குரிய சுமார் 400 Boeing 737 MAX 8 விமானங்கள் தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ளன. இரண்டு விபத்துகளுக்கு முன் இந்த விமானம் பல விமான சேவைகளின் விருப்பத்துக்குரிய விமானமாக விளங்கியது. அதனால் சுமார் 4,930 MAX 8 விமானங்கள் விற்பனை செய்யப்படவிருந்தது. ஆனால் தற்போது சில விமான சேவை நிறுவனங்கள் தமது MAX 8 கொள்வனவு இணக்கத்தை இரத்து செய்கின்றனர்.
.