Catalonia பகுதி ஸ்பெயினின் மத்திய ஆட்சியில்

Spain

ஸ்பெயின் நாட்டின் வடகிழக்கு பகுதியான கற்றலோனியா (Catalonia) பகுதி அரசுக்கும், ஸ்பெயினின் மத்திய அரசுக்கும் இடையிலான மோதல் மீண்டும் உக்கிரம் அடைந்துள்ளது. இன்று ஸ்பெயின் மத்திய அரசு கற்றலோனியா பகுதியை மீண்டும் தனது ஆட்சியின் கீழ் எடுத்துள்ளது.
.
முதலில் கற்றலோனியா பகுதியின் தலைவர் Carles Puigdemont அப்பகுதியை சுதந்திர நாடாக்கும் நோக்கில் அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்றை அங்கு நடாத்தினார். வாக்கெடுப்பு சாதகமாக அமைய, இன்று கற்றலோனியா சுதந்திரத்தை பிரகடனம் செய்தது. உடனடியாக ஸ்பெயின் மத்திய அரசு, அந்நாடு Article155 க்கு அமைய, கற்றலோனியா பிரதேச அரசை கலைத்துடன், அப்பகுதி போலீஸ் சேவையையும் தனது ஆட்சிக்குள் எடுத்துள்ளது.
.
வரும் டிசம்பர் 21 ஆம் திகதி கற்றலோனியா பகுதிக்கு மீண்டும் தேர்தல் நடாத்த உள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
.
பிரிவை ஆதரித்தும், எதிர்த்தும் பல ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.
.
மத்திய அரசு பிரிவினைவாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கவுள்ளதாக கூறியுள்ளது. பிரிவினையாளர் குற்றவாளியாக காணப்படின் அவர்கள் 30 வருட சிறை தண்டனை பெறலாம்.
.

தமது எதிரி நாடுகளில் பிரிவினைகளை ஊக்குவிக்கும் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் கற்றலோனியா விடயத்தில், பிரிவினையை எதிர்த்து, ஸ்பெயினின் மத்திய அரசையே ஆதரிக்கின்றன.
.