CEB Chairman M. M. C. Ferdinando பதவி விலகினார்

CEB  Chairman M. M. C. Ferdinando பதவி விலகினார்

இலங்கை மின்சார சபையின் (CEB) Chairman M. M. C. Ferdinando இன்று பதவி விலகி உள்ளார். இவரின் பதவி விலகலை Power and Energy அமைச்சர் Kanchana Wijesekara ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

பிரதமர் மோதியின் விருப்பத்துக்கு இணங்க சனாதிபதி கோத்தபாய கூறியதற்கு ஏற்பவே தான் மன்னார் மற்றும் பூநகரி 500 MW காற்று மின் திட்டத்தை இந்திய அடானிக்கு வழங்கியதாக Chairman M. M. C. Ferdinando பாராளுமன்ற குழுவான COPE க்கு கூறி இருந்தார். இதனால் கோத்தபாய விசனம் கொள்ள Chairman M. M. C. Ferdinando பின்னர் தனது கூற்றை தவறு என்று பின்வாங்கி இருந்தார். தற்போது Chairman M. M. C. Ferdinando பதவியும் விளக்குகிறார்.

தற்போதைய Vice-Chairman Nalinda Ilangakoon புதிதாக Chairman பதவியை ஏற்றுக்கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

இந்திய காங்கிரஸ் உறுப்பினர் ராகுல் காந்தி பா. ஜ. கட்சியின் cronyism பாக்கு நீரிணையையும் தாண்டி சென்றுள்ளது என்று கூறியுள்ளார்.

கொழும்பு West Container Terminal திட்டமும் அடானிக்கே வழங்கப்பட்டு உள்ளது.