CIAயின் ஜேர்மன் தலைமையை வெளியேற்றம்

CIA

பெர்லின் (Berlin) நகரில் நிலைகொண்டுள்ள CIA இன் தலைமையை ஜேர்மன் நாட்டை விட்டு வெளியேறும்படி அந்நாடு வியாழக்கிழமை அறிவித்துள்ளது. இதை ஜேர்மன் அரச பேச்சாளர் Steffen Seibert ஒத்துக்கொண்டுள்ளார். இதனால் அண்மைக்கால அமெரிக்கா மற்றும் ஜேர்மன் இடையேயான உளவு விவகார முரண்பாடு உச்சத்துக்கு வந்துள்ளது.
.
இவ்வகையில் அமெரிக்கா தனது நட்பு நாடுகளை உளவு பார்க்கும் உண்மைகள் Edward Snowden மூலம் பகிரங்கத்துக்கு வந்திருந்தது. ஜேர்மனின் தலைமை Angela Merkelலின் தொலைபேசியை ஒட்டுக்கேட்டதாகவும் அமெரிக்கா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
.
இந்த அறிவிப்புக்கு முன், கடந்த வாரம் CIA இக்கு தகவல்களை வழங்கினார் என்று குற்றம்சுமத்தி 31 வயதுடைய, ஜேர்மன் உளவுப்பிரிவில் கடமையாற்றும் ஜேர்மன் நாட்டினர் ஒருவரை அந்நாட்டினர் July 3 ஆம் திகதி கைது செய்திருந்தனர்.
.

இந்த விடயம் அமெரிக்க-ஜேர்மன் உறவை முற்றாக முறிக்க மாட்டாது என்றாலும், இது ஒருவர் மீது மற்றவர் கொண்டுள்ள நம்பிக்கையை அழிக்கும்.