COVID மருந்து தயாரிப்பை இந்தியா 50% ஆல் குறைக்கிறது

COVID மருந்து தயாரிப்பை இந்தியா 50% ஆல் குறைக்கிறது

இந்தியாவின் COVID தடுப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனமான Serum Institute of India தனது Covishield தடுப்பு மருந்து (இந்திய தயாரிப்பான AstraZeneca மருந்து) தயாரிப்பை 50% ஆல் குறைக்கவுள்ளதாக கூறியுள்ளது. இந்தியாவின் தேவைக்கு போதுமான மருந்து கைவசம் உள்ளதாலேயே மேலதிக தயாரிப்பை குறைப்பதாக கூறுகிறது Serum.

இந்தியாவில் சுமார் 950 மில்லியன் பேர் COVID தடுப்பு ஊசிக்கு தகுதி உடையோராக உள்ளனர். அவர்களில் 816 மில்லியன் பேர் குறைந்தது 1 ஊசியாவது பெற்று உள்ளனர். அத்துடன் 512 மில்லியன் பேர் இரண்டாவது ஊசியும் பெற்று உள்ளனர் என்கிறது இந்திய சுகாதார அமைச்சு.

இந்தியர் பெறும் COVID தடுப்பு மருந்துகளில் 90% மானவை Serum தயாரிக்கும் Covishield மருந்தே. அதற்கு அடுத்ததாக இந்தியாவின் Covaxin மருந்தும், ரஷ்யாவின் Sputnik-V மருந்தும் உள்ளன.

அதேவேளை ஆபிரிக்கா கண்டத்தில் சுமார் 7.5% மக்கள் மட்டுமே தற்போது தடுப்பு COVID மருந்து பெற்றுள்ளனர். ஆபிரிக்காவை இந்தியா கைவிட்டு உள்ளது என்று Africa Centres for Disease Control குறைகூறி உள்ளது.

ஐ.நா. தலைமையிலான COVAX திட்டம் வறிய நாடுகளுக்கு COVID தடுப்பு மருந்து வழங்கி வருகிறது. ஆனால் Serum கடந்த ஏப்ரல் மாதம் தனது தயாரிப்பை COVAX திட்டத்துக்கு வழங்குவதை திடீரென நிறுத்தி இருந்தது. இந்தியாவுக்கு தனது முழு தயாரிப்பையும் வழங்கும் நோக்கத்திலேயே COVAX க்கு வழங்குவதை Serum நிறுத்தி இருந்தது. அதன் பின் COVAX க்கு இந்தியாவின் Serum தயாரிக்கும் மருந்தில் நாட்டம் குறைந்து உள்ளது.