F-35 தயாரிப்பிலிருந்து துருக்கியை நீக்கியது அமெரிக்கா

S-400

அமெரிக்காவின் மிக புதிய யுத்த விமானமான F-35 தயாரிப்பில் இருந்து துருக்கியை நீக்கி உள்ளது அமெரிக்கா. அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி துருக்கி S-400 என்ற வல்லமை மிக்க ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்ததே அமெரிக்காவின் சீற்றத்துக்கு காரணம்.
.
முன்னர் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்படி கடந்த கிழமை ரஷ்யாவில் இருந்து சிறுதொகுதி S-400 ஏவுகணைகள் துருக்கி வந்துள்ளன.
.
துருக்கி NATO அமைப்புள் இரண்டாவது பெரிய இராணுவத்தை கொண்ட நாடு. அத்துடன் NATO வின் முதல் எதிரி ரஷ்யா. அப்படி இருக்கையில் துருக்கி ரஷ்யாவின் வல்லமை கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்துவதால் தமது F-35 யுத்த விமானங்களுக்கு ஆபத்து நேரலாம் என்கிறது அமெரிக்கா.
.
அமெரிக்காவின் F-35 யுத்த விமானங்கள் ரஷ்யாவின் S-400 ரேடார்களுக்கு அண்மையில் பறக்கையில், ரஷ்யா F-35 விமானங்களை எவ்வாறு தாக்குவது என்பதை இலகுவில் அறிந்து கொள்ளலாம் என்று கருதப்படுகிறது.
.
முன்னர் துருக்கி 100 F-35 விமானங்களை கொள்வனவு செய்ய இணங்கி இருந்தது. அத்துடன் துருக்கியின் நிறுவனங்கள் F-35 விமானத்துக்கான பாகங்களை பலவற்றையும் தயாரிக்கின்றன.

.