Facebook, Twitter, Instagram அமெரிக்க ஆதரவு பதிவுகளை அழித்தன

Facebook, Twitter, Instagram அமெரிக்க ஆதரவு பதிவுகளை அழித்தன

அமெரிக்காவுக்கு ஆதரவான அதேவேளை சீனா, ரஷ்யா, ஈரான், மத்திய கிழக்கு நாடுகள், மற்றும் மத்திய ஆசிய நாடுகள் மீது பொய்யான கருத்துக்களை, செய்திகளை பரப்பும் பல கணக்குகளை Facebook, Twitter, Instagram ஆகிய நிறுவனங்கள் புதன்கிழமை மூடி உள்ளன.

மேற்படி நடவடிக்கையில் குறைந்தது 25 Facebook கணக்குகள், 12 Twitter கணக்குகள், 10 Instagram கணக்குகள் மூடப்பட்டு உள்ளன.

அடையாளம் காணப்படாதோரால் மேற்படி அமெரிக்க ஆதரவு கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு பதிவுகள் செய்யப்பட்டு இருந்தன. அத்துடன் இந்த பதிவுகள் மேற்கு வாழ்க்கை முறையும் பரப்பியிருந்தன.

உதாரணமாக Valeria Menendez என்ற Puerto Richo நாட்டு நடிகையின் படம் ஒன்றை களவாடி, நடிகையின் முகத்தில் சிறிது மாற்றம் செய்து ஒரு பொய் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.

சுமார் 5 ஆண்டுகளாக பதிவுகளை செய்த மேற்படி கணக்குகளை மூன்று நிறுவங்களும் மூடிய உண்மையை Graphika Inc, Stanford Internet Observatory ஆகிய அமைப்புகளே பகிரங்கப்படுத்தி உள்ளன.

இந்த பொய் பதிவுகளின் நோக்கம் ரஷ்யா, சீனா, ஈரான் போன்ற நாடுகள் மீது நம்பிக்கை கொள்ளாது அமெரிக்கா மீது நம்பிக்கை கொள்ள வைப்பதே.

கடந்த பெப்ரவரி மாதம் Facebook பொய்யான 40 ரஷ்ய ஆதரவு கணக்குகளை மூடி இருந்தது.

படம்: Graphika and Stanford Internet Observatory