இந்த ஆண்டு இடம்பெறவுள்ள FIFA உதைபந்தாட்ட போட்டி ஒன்றிற்கான “category 1” பார்வையாளர் ஆசனத்தின் சட்டப்படியான கட்டணம் $32,970 என்று FIFA அறிவித்துள்ளது.
ஜூலை மாதம் 19ம் திகதி அமெரிக்காவின் New Jersey மாநிலத்தின் East Rutherford நகரில் உள்ள MetLife மைதானத்தில் இடம்பெறவுள்ள போட்டிக்கே இந்த கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மைதானத்துக்கு நியூ யார்க் நகரில் இருந்து பயணிக்க பஸ் கட்டணம் $150 என்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 14ம் திகதி Texas மாநிலத்து AT&T மைதானத்தில் இடம்பெறவுள்ள போட்டிக்கு ஆசன கட்டணங்கள் $11,130, $4,300, $3,710, $2, 705 ஆக உள்ளன.
இறுதி போட்டிக்கான ஆசனங்கள் இடைத்தரகரால் இணையத்தில் $11,500,000 வரையில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.
இம்முறை FIFA போட்டிகள் அமெரிக்கா, கனடா, மெக்ஸிக்கோ ஆகிய 3 நாடுகளில் இடம்பெறும்.
