Georgetown: சீன STEM PhD அமெரிக்காவை பின்தள்ளும்

Georgetown: சீன STEM PhD அமெரிக்காவை பின்தள்ளும்

2025ம் ஆண்டளவில் சீனா உருவாக்கும் STEM (Science, Technology, Engineering, Mathematics) PhD களின் எண்ணிக்கை அமெரிக்கா உருவாக்கும் STEM PhD களின் எண்ணிக்கையை பின்தள்ளும் என்கிறது அமெரிக்காவின் Georgetown University யுடன் இணைந்து இயங்கும் Center for Security and Emerging Technology என்ற think tank ஆய்வு ஒன்று.

2025ம் ஆண்டில் சீனா 77,000 STEM PhD களையும், அமெரிக்கா 40,000 STEM PhD களையும் உருவாக்கும் என்று மேற்படி ஆய்வு கணித்துள்ளது. அதனால் அமெரிக்கா மேற்படி நாலு துறைகளிலும் பின்தங்கும் என்றும் கருதப்படுகிறது.

2019ம் ஆண்டு அமெரிக்க தேசிய அளவிலான விஞ்ஞான சோதனையில் 33.3% நாலாம் வகுப்பு, மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் சித்தி அடைந்திருந்தனர். அதேவேளை 12ம் வகுப்பில் 25% மாணவர் மட்டுமே சித்தி அடைந்திருந்தனர்.

2018ம் ஆண்டு PISA (Programme for International Student Assessment) மொத்தம் 79 நாடுகள் இடையே செய்து கொண்ட கணித, வாசிப்பு, விஞ்ஞான சோதனைகள் மூன்றிலும் சீனா 1ம் இடத்தில் இருந்துள்ளது. சிங்கப்பூர் இரண்டாம் இடத்தில் உள்ளது. அமெரிக்கா வாசிப்பில் 13ம் இடத்திலும், விஞ்ஞானத்தில் 17ம் இடத்திலும், கணிதத்தில் 31ம் ஆம் இடத்திலும் இருந்துள்ளது.