Ghanaவில் விபத்து, 71 பேர் பலி

Ghana

ஆபிரிக்காவின் மேற்கே உள்ள நாடான கானாவில் (Ghana) இடம்பெற்ற பஸ்-கனரக வாகன மோதலுக்கு 71 பேர் பலியாகியுள்ளதுடன் பலர் படுகாயமடைந்தும் உள்ளனர். அரச பஸ் சேவையான Metro Mass Transit க்கு சொந்தமான பஸ்சும் தக்காளி ஏற்றி சென்ற கனரக வாகனமுமே இவ்வாறு மோதியுள்ளன.
.
உள்ளூர் நேரப்படி இந்த விபத்து புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இரண்டு வாகனங்களும் ஒரு திருப்பமான வீதியில் விதிமுறைக்கு மிதமான வேகத்தில் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
.

பயணிகள் சென்ற பஸ் வேறு ஒரு வாகனத்தை வேகமாக கடக்க முனையும்போது எதிரே வந்த தக்காளி வாகனத்துடன் மோதியுள்ளது.
.