Glacier உடைவால் ஆறு பெருக்கெடுத்து பல இந்தியர் பலி

Glacier உடைவால் ஆறு பெருக்கெடுத்து பல இந்தியர் பலி

இந்தியாவின் எல்லையோர மாநிலமான உத்தரகாண்ட் (Uttarakhand) ஊடே செல்லும் Dhauliganga ஆறு திடீரென பெருக்கெடுத்ததால் நூற்றுக்கும் மேலானோர் பலியாகியும், தொலைந்தும் உள்ளனர். ஆற்றின் ஆரம்ப மலை பகுதியில் Glacier (இறுகிய snow) உடைந்து வீழ்ந்ததாலேயே மேற்படி திடீர் வெள்ளம் உருவாகியது.

பெருக்கெடுத்த ஆறு சிறிய அணை ஒன்றையும் உடைத்துள்ளது. அதனால் பல இடங்களில் ஆறு பல அடிகள் உயரத்தில் வேகமாக பாய்ந்து ஆற்றோரம் இருந்த வீடுகளையும் உடைத்துள்ளது.

Rishiganga Hydroelectric என்ற மின் உற்பத்தி நிலையத்தில் பணியாற்றிய 50 பேரும் தொலைந்து உள்ளனர் என்றும் உத்தரகண்ட் போலீஸ் கூறுகிறது. Tapovan அணை பகுதியில் உள்ள tunnel ஒன்றில் இருந்து 16 பணியாளர் மீட்கப்பட்டு உள்ளனர்.

கங்கைக்கு நீர் வழங்கும் 6 கிளை ஊற்றுகளில் Dhauliganga வும் ஒன்று. இது Joshimath மலை பகுதில் Alaknanda ஆற்றுடன் இணைகிறது.