Golan Heights இஸ்ரேலியர் தொகை இரட்டிக்கும்

Golan Heights இஸ்ரேலியர் தொகை இரட்டிக்கும்

1967ம் ஆண்டு சிரியாவுடனான யுத்தத்தில் கைப்பற்றிய சிரியாவின் Golan Heights பகுதியில் இஸ்ரேல் தனது சனத்தொகையை இரண்டு மடங்கு ஆக்கும் என்று ஞாயிறுக்கிழமை இஸ்ரேலின் பிரதமர் கூறியுள்ளார்.

ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் இஸ்ரேலியரை குடியிருப்பு செய்ய சுமார் சுமார் $310 மில்லியன் ஞாயிற்றுக்கிழமை ஒதுக்கிடப்பட்டு உள்ளது.

1967ம் ஆண்டு கைப்பற்றிய இந்த நிலத்தை 1981ம் ஆண்டு இஸ்ரேல் தனதாக்கியது. ஆனாலும் இந்த இணைப்பை ஐ.நா. உட்பட உலக நாடுகள் அனைத்தும் சட்டவிரோதமானது என்றே கூறி வந்தன. பின் ஆட்சிக்கு வந்த ரம்ப் அமெரிக்க சட்டத்தில் Golan இணைப்பை அந்நாட்டில் சட்டமாக்கினார்.

ரம்புக்கு நன்றி செலுத்தும் நோக்கில் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் அமைக்கப்படும் நகர் ஒன்றுக்கு Trump Heights என்றும் பெயரிடப்பட்டு உள்ளது.

அமெரிக்காவில் தமது பொருட்களை விற்பனை செய்ய விரும்பும் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவை பகைக்க விரும்பாத காரணத்தால் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை கண்டுகொள்வது இல்லை.

ஆனாலும் ரஷ்யா கிராமியாவை தன்னுடன் இணைத்தபோது ஆளுக்கொரு சட்டம் கொள்ளும் மேற்கு நாடுகள் கிளர்ந்து எழுந்தன.