Hong Kong ஆர்ப்பாட்டத்துக்கு அமெரிக்கா காரணம்?

HK_US_Flag

Hong Kong நகரில் கடந்த சில கிழமைகளாக இடம்பெற்றுவரும் ஆர்பாட்டங்களுக்கு அமெரிக்கா பின்னணியில் உள்ளது என்று சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பத்திரிகைகள் கூறுகின்றன.
.
Hong Kong நகரில் உள்ள அமெரிக்க நிலையத்தின் அரசியல் துறைக்கு பொறுப்பான Julie Eadeh என்பவர் ஆர்ப்பாட்டத்தின் முன்னனி பிரமுகரான Joshua Wong என்பவரை அண்மையில் சந்தித்ததாக கூறப்படுகிறது.
.
இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பலர் அமெரிக்க கொடிகளை தாங்கியயும் இருந்தனர். முன்னர் ஆர்பாட்டக்காரர் சீன இலச்சினையை உடைத்து பிரித்தானிய கொடியையும் ஏற்றி இருந்தனர்.
.
Hong Kong விசயத்தில் தாம் தற்போதைக்கு தலையிடப்போவது இல்லை என்றும், ஆனால் நிலைமை உக்கிரம் அடைந்தால் தமது படையை அனுப்ப தயங்காது என்றும் கூறியுள்ளது சீனா.

.