Houston சீன முகவரகத்தை மூட அமெரிக்கா உத்தரவு

அமெரிக்காவின் Texas மாநிலத்தின் ஹியூஸ்ரன் (Houston) நகரில் அமைத்துள்ள சீன முகவரகத்தை (Consulate General) மூடுமாறு சீனாவுக்கு அமெரிக்க வெளியறவு திணைக்களம் இன்று புதன்கிழமை உத்தரவு இட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் முரண்பாடுகளின் உச்சத்தை இந்த உத்தரவு காட்டுகிறது.
.
ஜூலை 24 ஆம் திகதிக்கு முன் அனைத்து பணியாளர்களும் மேற்படி நிலையத்தில் இருந்து அகற்றப்படவேண்டும் என்றும் மேற்படி உத்தரவு கூறியுள்ளது.
.
இதனால் விசனம் கொண்டுள்ள சீனா, மேற்படி உத்தரவு நீக்கப்படாவிடின் சீனா பதில் நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளது. அத்துடன் இரு நாடுகளுக்குள் முரண்பாடுகள் வளர அமெரிக்காவே காரணம் என்பதை மேற்படி உத்தரவு காட்டுகிறது என்றும் சீனா கூறி உள்ளது. சீனாவின் பத்திரிகை ஒன்று ஹாங் காங் நகரில் உள்ள அமெரிக்க முகவரகத்தை பதிலுக்கு மூட உத்தரவிட வேண்டும் என்றுள்ளது.
.
உத்தரவு பகிரங்கத்துக்கு வர முன் மேற்படி முகவரக ஊழியர்கள் சில ஆவணங்களை வளாகத்தில் எரித்ததாக அந்நகர செய்திகள் கூறுகின்றன.
.
சீனாவின் Hong Kong, Shenyang, Chengdu, Shanghai, Wuhan, Guangzhou ஆகிய நகரங்களில் அமெரிக்க முகவரகங்கள் உண்டு. அமெரிக்காவின் New York, Los Angeles, San Francisco, Chicago, Houston ஆகிய நகரங்களில் சீன முகவரகங்கள் உண்டு.
.
Uighur மற்றும் ஹாங் காங் விசயங்கள் தொடர்பாக ஏற்கனவே அமெரிக்கா சில சீன அதிகாரிகள் மீது தடைகளை விதித்து இருந்தது. பதிலுக்கு சீனா சில அமெரிக்க அதிகாரிகள் மீது (அனைவரும் ரம்பின் Republican கட்சியினர்) தடைகளை விதித்து இருந்தது.
.
நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள அமெரிக்க சனாதிபதி தேர்தலில் முன் இவ்வகை இழுபறிகள் தொடரும். வர்த்தகத்தில் தனது விருப்பப்படி சீனா செயல்படாமையாலும், கரோனா ரம்பின் இயலாமையை வெளிப்படுத்தியதாலும் ரம்ப் சீனா மீது விசனம் கொண்டுள்ளார்.
.