HRW: இஸ்ரேல் இனவெறி குற்றம் செய்கிறது

HRW: இஸ்ரேல் இனவெறி குற்றம் செய்கிறது

Human Rights Watch (HRW) இன்று செவ்வாய் வெளியிட்ட அறிக்கையில் இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இனவெறி குற்றங்கள் (crimes of apartheid and prosecutions) செய்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவை தளமாக கொண்ட இந்த அமைப்பின் 213 பக்கங்களை கொண்ட அறிக்கை இஸ்ரேல் தொடர்ந்தும் பாலத்தீனர்களை அடக்கி ஆள முனைகிறது என்று கூறியுள்ளது.

ஆக்கிரமிப்புக்கு உள்ளன பாலஸ்தீனர் மட்டுமன்றி, இஸ்ரேலில் உள்ள இஸ்ரேல் குடிவாசிகளான பாலஸ்தீனர்களையும் இஸ்ரேல் அரசு இரண்டாம் தரத்தினராக அடிமைப்படுத்துகிறது என்று மேற்படி அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீனர்களுக்கு அப்பால் இஸ்ரேலில் சுமார் 20% சனத்தொகை அரபினர். இவர்கள் இஸ்ரேல் குடியினர் என்றாலும் அவர்களும் இரண்டாம் தர குடியினர் போலவே அடக்கப்படுகின்றனர்.

International Criminal Court (ICC) பாலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் குற்ற செயல்களை விசாரணை செய்தல் அவசியம் என்றுள்ளது HRW. ஆனால் அதற்கு இணங்க மறுக்கிறது இஸ்ரேல். அமெரிக்காவின் அரவணைப்பில் உள்ள இஸ்ரேலை ஐ.நாவோ அல்லது ICC நீதிமன்றமோ எதுவும் செய்ய முடியாது.

மூன்று மாதங்களுக்கு முன் B’Tselem என்ற இஸ்ரேலை தளமாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பும் பாலத்தீனருக்கு எதிரான இஸ்ரேலின் அணுகுமுறைகளை சாடி இருந்தது.