Ian Paisley இலங்கைக்கு இலஞ்ச உல்லாச பயணம்?

IanPaisley

வட அயர்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் இயன் (Ian Paisley) சுமார் 100,000 பிரித்தானிய பௌண்ட்ஸ் பெறுமதியான உல்லாச பயணத்தை இலஞ்சமாக பெற்றுள்ளார் என்று கூறுகிறது பிரித்தானிய Telegraph பத்திரிகை. அதை மறுக்கிறார் Ian Paisley.
.
இயன் வட அயர்லாந்தின் Democratic Unionist Party (DUP) என்ற கட்சியை சார்ந்தவர். இயனின் தந்தையார் DUP கட்சியை ஆரம்பித்தவர்களுள் ஒருவர். தந்தையார் வென்றுவந்த தொகுதியில் இயன் 2010 ஆம் ஆண்டு முதல் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். தற்போது பிரித்தானியாவில் தெரேசா மே தலைமையில் உள்ள ஆட்சியில் 10 DUP பாராளுமன்ற உறுப்பினர்களும் அங்கம்.
.
Telegraph செய்தி இயன், அவரது மனைவி, அவரது பிள்ளைகள் ஆகியோர் 2013 ஆம் ஆண்டில் இலங்கைக்கு இரண்டு உல்லாச பயணங்களை மேற்கொண்டதாகவும், அவற்றுக்கான செலவுகள் மேசைக்கு கீழான உதவிகள் என்றும் கூறுகிறது.
.
இயன் குடும்பத்தின் பயணத்தை இலங்கையின் Sajin De Vass Gunawardena செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது. Sajin 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இயனுக்கு லண்டன் நகரில் விருந்து ஒன்றை வழங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது.
.
BBC நிகழ்வு ஒன்றில் பங்குகொள்ளவிருந்த இயன், Telegraph செய்தி வெளிவர இருந்தமையை அறிந்து, உடனடியாக BBC நிகழ்வை இரத்து செய்திருந்தார்.
.
2013 ஆம் ஆண்டில் இயன் இலங்கைக்கு செய்திருந்த மூன்றாவது பயணத்தை முறைப்படி பகிரங்கம் செய்திருந்தாராம்.
.

Tansparency International இந்த விவகாரத்தை பிரித்தானியா விசாரணை செய்தல் அவசியம் என்றுள்ளது.
.