Indiana சீக்கியர் கொலைக்கு துவேசம் காரணம்?

Indiana சீக்கியர் கொலைக்கு துவேசம் காரணம்?

கடந்த வியாழக்கிழமை இரவு 19 வயதுடைய Brandon Scott Hole என்பவன் அமெரிக்காவின் Indiana மாநிலத்தில் உள்ள Indianapolis என்ற நகரில் உள்ள FedEx நிலையம் ஒன்றில் 8 பேரரை சுட்டு கொலை செய்து பின் தன்னையும் சுட்டு தற்கொலை செய்திருந்தான்.

இந்த படுகொலைக்கு பலியானோருள் 4 பேர் சீக்கிய ஊழியர்கள். இதுவரை போலீசார் படுகொலைக்கான காரணத்தை அறிவிக்கவில்லை என்றாலும், இனத்துவேசம் ஒரு காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொலையாளி கடந்த ஆண்டு இந்த FedEx நிலையத்தில் பணியாற்றி உள்ளார்.

இந்த FedEx நிலையத்தில் பணிபுரிவோருள் 90% ஊழியர்கள் சீக்கியர் என்று கூறியுள்ளார் Randal Taylor என்ற போலீஸ் உயர் அதிகாரி.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் சீக்கியர் Indiana மாநிலத்தில் வசிக்க ஆரம்பித்தனர். தற்போது அந்த மாநிலத்தில் 8,000 முதல் 10,000 வரையான சீக்கியர் வாழ்கின்றனர். 1999ம் ஆண்டில் அங்கு முதல் சீக்கிய வழிபாட்டுத்தலம் (Gurdwara) அமைக்கப்பட்டது. அமெரிக்காவில் சுமார் 500,000 சீக்கியர் வாழ்கின்றனர்.

வியாழன் கொலை செய்யப்பட்டோர்:
Amarjeet Johal, பெண், 66 வயது (சீக்கியர்)
Jaswinder Kaur, பெண், 64 வயது (சீக்கியர்)
Jaswinder Singh, ஆண், 68 வயது (சீக்கியர்)
Amarjit Sekhon, பெண், வயது 48 (சீக்கியர்)
Matthew Alexander, ஆண், 32 வயது
Samaria Blackwell, பெண், 19 வயது
Karli Smith, பெண், 19 வயது
John Weisert, ஆண், 74 வயது