IPKF கொடுமைகளை அறியாத இந்திய மேஜர் ஜெனரல்

IPKF

பிபிசி (BBC) வழிகாட்டலில், இந்தியாவின் Vineet Khare என்ற இந்தி மொழி சேவை நிருபரும், இலங்கையில் சேவை செய்திருந்த IPKF இராணுவ அதிகாரி
மேஜர் ஜெனரல் Sheonan Singhகும் அண்மையில் யாழ்ப்பாணம் சென்றுள்ளார்கள். அந்த பயணத்தின்போது அப்பாவிகள் யாழ்ப்பாண வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக எதுவும் தெரியாது என்றுள்ளார் அந்த முன்னாள் இராணுவ அதிகாரி.
.
1987 ஆம் ஆண்டு, 30 வருடங்களுக்கு முன், இலங்கையில் அமைதியை நிலைநாட்ட வந்த IPKF படைக்கும் புலிகளுக்கும் இடையில் போர் மூண்டபோது பல்லாயிரம் அப்பாவி பொதுமக்களும் கொலை செய்யப்பட்டனர். அவ்வகை படுகொலைகளில் ஒன்று அந்த வருடம் அக்டோபர் மாதம் 22ம் திகதி யாழ்ப்பாண வைத்தியசாலையில் இடம்பெற்ற கொலைகளாகும்.
.
புலிகள் வழமைபோல் வைத்தியசாலையில் இருந்து இந்திய இராணுவத்தை தாக்கியபின் இந்திய இராணுவம் 60 வைத்தியசாலை ஊழியர், மற்றும் நோயாளிகளை படுகொலை செய்திருந்தனர். அவர்களின் புகைப்படங்கள் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள இடத்துக்கும் இந்த முன்னாள் இந்திய இராணுவ அதிகாரி இம்முறை சென்றுள்ளார்.
.
இந்த படுகொலை தொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் இந்திய இராணுவ அதிகாரி தனக்கு இந்த விடயம் தொடர்பாக எதுவும் அப்போது தெரிந்திருக்கவில்லை என்றும், விடயம் கீழ் அதிகாரிகளால் மறைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறியுள்ளார். இந்த கொலைகளை கவலைக்குரியது என்று கூறிய அவர், யுத்தத்தின்போது இவ்வகை நிகழ்வுகள் நடப்பதுண்டு என்றும் கூறியுள்ளார்.
.
தெய்வேந்திரம் என்ற முன்னாள் வைத்தியசாலை ஊழியர் இந்த கொலைகளை தலைபாகை அணிந்த சீக்கிய இராணுவத்தினர் செய்ததை தான் பார்த்தாக கூறியுள்ளார்.
.
தம்மிடம் அப்போது இருந்த ஆயுதங்களிலும் தரமான ஆயுதங்களை புலிகள் கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்து உள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தில் புலிகளுடன் இடம்பெற்ற தாக்குதல் 24 மணி நேரம் நீடித்ததாகவும், அதில் 36 இந்திய இராணுவம் பலியானதாகவும் அவர் கூறியுள்ளார்.
.