IPKF 1985 ஆம் ஆண்டிலேயே தயாராம்

SriLanka

அண்மையில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள பழைய CIA குறிப்புக்களின் படி இந்திய தனது படைகளை இலங்கைக்கு அனுப்ப 1985 ஆம் ஆண்டிலேயே தயார் படுத்தி உள்ளதாம். இந்த CIA கருத்துப்படி இந்தியா இலங்கையின் விமான தளம் ஒன்றை ஆகாய படைகளை அனுப்புவதன் மூலம் கட்டுப்பாடில் கொண்டுவந்து பின் தமது படைகளை பலப்படுத்தும் திட்டத்தை கொண்டிருந்ததாம். இவ்வகை பயிற்சி ஒன்றை இந்திய படையினர் 1985 ஆண்டில் திருவானத்தபுரம் பகுதியில் செய்து இருந்தனராம்.
.
“The paratroopers probably would try to seize an airfield so that reinforcement could be brought in by air. U.S. defence attache sources report the Army and Air Force practiced such an operation late last year (1985) at Thivanduram” என்கிறது CIAயின் அந்த 1986 ஆம் ஆண்டு குறிப்பு.
.

மேலும் இந்த குறிப்புகளின்படி ஜே.ஆர். அமெரிக்க ராஜதந்திரி Peter Galbraithக்கு தான் யாழ்பாணத்தை பிடிக்கும்படி இரண்டு தடவைகள் இராணுத்தை கேட்டிருந்தார் என்றும் ஆனால் அழிவுகள் அதிகமாக இருக்கும் என்று கூறி இலங்கை இராணுவம் மறுத்து விட்டதாகவும் கூறியுள்ளார். ஜே. ஆர். “burn the place to the ground” என்று இராணுவத்திடம் கூறியிருந்தாராம்.
.