JBS இறைச்சி நிறுனத்தின் மீதும் இணைய தாக்குதல்

JBS இறைச்சி நிறுனத்தின் மீதும் இணைய தாக்குதல்

உலகின் மிகப்பெரிய இறைச்சி நிறுவனமான JBS மீதும் இணையம் மூலமான தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அதனால் இந்த நிறுவனத்தின் அஸ்ரேலிய, அமெரிக்க, கனடிய தொழிற்சாலை பணிகள் இடைநிறுத்தப்பட்டு உள்ளன. மொத்தம் 15 நாடுகளில் இயங்கும் இந்த நிறுவனத்திடம் உள்ள 150 தொழிற்சாலைகளில் சுமார் 150,000 பேர் பணியாற்றுகின்றனர்.

இந்த தாக்குதலையும் ரஷ்யாவை தளமாக கொண்ட குழு ஒன்றே செய்துள்ளதாக கூறப்படுகிறது. Ransomware software மூலம் தாக்கும் இந்த குழு JBS நிறுவனத்தின் கணணிகளின் தரவுகள், ஆவணங்கள் அனைத்தையும் encrypt செய்துள்ளார்கள். பணய பணம் வழங்கினால் மட்டுமே தரவுகளை மீண்டும் decrypt செய்ய வழி சொல்வார்கள். பணம் வழங்க மறுப்பின் தரவுகளை அழித்துவிடுவார்கள்.

JBS நிறுவனம் அமெரிக்க வெள்ளை மாளிகையின் உதவியை நாடி உள்ளது. வெள்ளை மாளிகை ரஷ்ய அரசுடன் தொடர்பு கொண்டுள்ளது.

சில தினங்களுக்கு முன் அமெரிக்காவின் Colonial Pipeline என்ற எரிபொருள் காவும் நிறுவனத்தின் குழாய் வலையமைப்பும் இணையம் மூலமான தாக்குதலுக்கு ஆளாகி இருந்தது. அந்த நிறுவனம் $4.4 மில்லியன் பணய தொகை வழங்கியே சேவையை மீண்டும் தொடர்ந்தது.

இவ்வகை பணய பணம் bitcoin மூலாமே பெறப்படும். அதனால் அவை செல்லும் இடத்தை தடயம் பார்க்க முடியாது.