Khashoggi மரணத்தை ஏற்றுக்கொண்டது சவுதி

JamalKhashoggi

துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் (Istanbul) உள்ள சவுதி தூதுவரகத்தில் வைத்து பத்திரிகையாளர் ஜமால் கசோகி (Jamal Khashoggi) மரணமானதை சவுதி அரசு சற்றுமுன் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனாலும் கசோகி எவ்வாறு இறந்தார் என்பதையோ, அல்லது அவரின் உடல் எங்கே உள்ளது என்பதையோ சவுதி தெரிவிக்கவில்லை.
.
கசோகியின் மரணம் சவுதி தூதுவரகத்தில் நிகழ்ந்தது என்பதை துருக்கி திடமாக கூறி இருந்திருந்தும், அதை சவுதி இதுவரை மறுத்து வந்திருந்தது. கசோகி தூதுவரகத்தை விட்டு வெளியேறிவிட்டார் என்று உத்தியோகபூர்வமாக கூறியும் இருந்தது. ஆனால் ஆதாரங்கள் அவர்களை இறுக்க, தற்போது மரணத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
.
இந்த மரணத்துடன் தொடர்பு கொண்டிருந்த 4 அதிகாரிகளை தாம் பதவி நீக்கியுள்ளதாகவும் சவுதி கூறியுள்ளது. மேலும் 18 பேர் விசாரணைகளுக்காக சவுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாவும் கூறப்பட்டுள்ளது.
.
இதுவரை சவுதியை பாதுகாக்க முனைந்த அமெரிக்க ஜனாதிபதி ரம்பும் சவுதியை மெல்ல கைவிட ஆரம்பித்துள்ளார். அமெரிக்காவின் காங்கிரஸ் சவுதி மீது நடைமுறை செய்ய விரும்பும் தடைகளை தான் கருத்தில் எடுக்கவுள்ளதாக ரம்ப் கூறியுள்ளார்.
.
துருக்கி இறந்தவரின் உடலை தேடும் முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளது.
.
கசோகி ஒரு சவுதி குடிமகன் என்றாலும், சில மாதங்களாக அவர் சவுதி செல்வதை தவிர்த்து வந்துள்ளார். அமெரிக்காவின் The Washington Post பத்திரிகையில் எழுதும் கசோகி சவுதியின் தவறுகளையும் எழுதியுள்ளார்.
.