Lotus Tower திட்டத்தில் $11 மில்லியன் மாயமானது

SriLankaChina

இன்று திறப்பு விழா செய்யப்பட்ட, தென் ஆசியாவிலேயே மிக உயர்ந்த (356.3 மீட்டர்) கோபுரமான, Louts Tower தொடர்பாக Reuters செய்தி நிறுவனம் ஒரு கட்டுரையை வெளியிட்டு உள்ளது. அந்த கட்டுரையில் இந்த கட்டுமானத்தின் போது மாயமான $11 மில்லியன் தொடர்பாக கருத்துக்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
.
ஜனாதிபதி சிறிசேனாவின் கூற்றுப்படி 2012 ஆம் ஆண்டில், ராஜபக்ச ஆட்சி காலத்தில், இலங்கையின் Telecommunication Regulatory Commision (TRC) 2 பில்லியன் ($11 மில்லியன்) பணத்தை சீனாவின் Aerospace Long-March International Trading Co Ltd (ALIT) வழங்கி உள்ளது.
.
ஆனால் ALIT என்ற அந்த நிறுவனம் 2016 ஆம் ஆண்டில் இருப்பிடம் தெரியாது மறைந்துள்ளது. சிறிசேனாவின் வேண்டுகோளுக்கு இணங்க பெய்ஜிங்கில் நிலைகொண்டுள்ள இலங்கைக்கான சீனாவுக்கான தூதுவர் நேரடியில் சென்று ALIT என்ற நிறுவனத்தை தேடியபோதும் அதன் இருப்பிடம் தெரியவில்லை.
.
Reuters நிருபர்களும் மேற்படி நிறுவனத்தை தொலைபேசி, ஈமெயில் போன்ற வழிகளில் அடைய முடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
.
Lotus Tower க்கான மொத்த செலவின் ($104.36 மில்லியன்) 80% முதலீட்டை சீனாவின் Exim Bank வழங்கியது என்றும், மிகுதி 20% முதலீட்டை TRC வழங்கியது என்றும் கூறப்பட்டு உள்ளது.
.