நவம்பர் 4ம் திகதி இடம்பெறவுள்ள நியூ யார்க் மாநகர தேர்தலில் Zohran Momdani என்ற இஸ்லாமியர் வென்றால் வரி பணத்தில் இருந்து நியூ யார்க் நகருக்கு வழங்கப்படும் நிதியை வழங்காது தடுப்பேன் என்று அமெரிக்கா சனாதிபதி மிரட்டி உள்ளார்.
Eric Adam என்ற தற்போதைய நகர முதல்வர் போதிய ஆதரவு இல்லாததால் ஞாயிறு போட்டியில் இருந்து விலகி உள்ளார். இவர் முதலில் Democratic கட்சி சார்பில் போட்டியிட்டு முதல்வராக பதவி ஏற்று இருந்தாலும் இவர் மீது ஊழல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட பின் Democratic கட்சி இவரை விலக்கி இருந்தது.
ஆனாலும் Adam சுயேட்சையாக மீண்டும் நகர முதல்வர் பதவிக்கு Republican கட்சி ரம்பின் ஆதரவுடன் போட்டியிட்டார். இதனால் Democratic கட்சி ஆதரவாளர் கடும் வெறுப்பு அடைந்துள்ளனர்.
Adam ரம்புக்கு நெருக்கம் ஆகியதால் Adam மீதான வழக்குகளை புதிதாக வந்த ரம்ப் அரசு, போதிய ஆதாரங்கள் இருந்தும், கைவிட்டு இருந்தது. இதனால் வெறுப்பு அடைந்த பல அரச சட்டத்தரணிகள் தமது பதவிகளை விட்டு நீங்கி இருந்தனர்.
Adam விலகியதால் தற்போது போட்டி Mamdani க்கும் முன்னாள் நியூ யார்க் மாநில ஆளுநர் Andrew Cuomo வுக்கும் இடையில் உள்ளது.
Cuomo 2021ம் ஆண்டு பாலியல் குற்றச்சாட்டு வழக்குகள் காரணமாக ஆளுநர் பதவியில் இருந்து நீங்கி இருந்தார்.
Adam வெளியேறிய நிலையில் ரம்ப் தற்போது Cuomo வை ஆதரிக்க ஆரம்பித்துள்ளார்.