Mega Million குலுக்கல் பரிசு $1.6 பில்லியன்

MegaMillions

வரும் செவ்வாய்க்கிழமை அமெரிக்காவில் இடம்பெறவுள்ள மெகா மில்லியன் (Mega Million) குலுக்கலுக்கான முதல் பரிசு தொகை $1, 600,000,000 ஆக்கவுள்ளது. நேற்று வெள்ளி இடம்பெற்ற குலுக்கலில் எவரும் முதல் பரிசுக்கான எண்களை (15, 23, 53, 65, 70, Mega Ball 7) தெரிவு செய்யாதவிடத்து இந்த கிழமை பரிசு $1.6 ஆக உயர்ந்துள்ளது.
.
இந்த குலுக்கல் பரிசு வழங்கப்படும் போது இதுவே உலகின் மிகப்பெரிய குலுக்கல் பரிசாக இருக்கும். இதற்கு முன், 2016 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் Powerball குலுக்கல் $1.58 பில்லியன் பணத்தை பரிசாக வழங்கி இருந்தது.
.
உலகின் பல நாடுகளில் குலுக்கல் பரிசு மீது வருமான வரி அறவிடப்படுவது இல்லை என்றாலும், அமெரிக்காவில் குலுக்கல் பரிசுகளுக்கு வரி செலுத்தல் அவசியம். அமெரிக்காவில் இவ்வகை பெருந்தொகை பரிசுகளின் வரி வீதம் சுமார் 37% ஆக இருக்கும்.
.

Mega Million ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும் குலுக்கப்படும்.  மெகா மில்லியன் குலுக்கல் அமெரிக்காவின் 44 மாநிலங்களிலும், தலைநகர் DCயிலும் விற்பனை செய்யப்படுகிறது. குலுக்கல் சீட்டு ஒன்றின் விலை $2.00. ஒருவர் இந்த பரிசை வெல்வதற்கான நிகழ்த்தவு சுமார் 302 மில்லியனுக்கு 1 மட்டுமே (1 : 302,575,350).