Meng விமானம் அலாஸ்காவை தவிர்த்தே சென்றது

Meng விமானம் அலாஸ்காவை தவிர்த்தே சென்றது

வெள்ளிக்கிழமை அமெரிக்கா Huawei Technologies நிறுவனத்தின் chief financial officer Meng மீதான வழக்கை deferred prosecution agreement மூலம் பின்வாங்கியதை தொடர்ந்து கனடா அவரை விடுதலை செய்திருந்தது. ஏற்கனவே வாடகைக்கு அமர்த்தப்பட்டு அங்கு வந்திருந்த Air China flight CA552 விமானம் மூலம் உடனடியாக Meng வன்கூவரில் இருந்து தெற்கு சீன நகரான Shenzhen க்கு பறந்திருந்தார்.

வழமையாக வன்கூவரில் இருந்து Hong Kong, அதை அண்டிய Shenzhen நகரங்களுக்கான விமானங்கள் அலாஸ்கா மீதே பறக்கும். ஆனாலும் Meng சென்ற விமானம் அமெரிக்காவின் வான்பரப்பான அலாஸ்கா வான்பரப்பை தவிர்த்து, வழமைக்கு மாறாக வடதுருவம் நோக்கி சென்று பின் ரஷ்யா ஊடே சென்றுள்ளது.

குறிப்பாக அலாஸ்காவில் இருந்து இயங்கும் Anchorage Arctic FIR (Flight Information Region) சேவைக்கு உட்பட்ட வான்பரப்பை Meng சென்ற விமானம் தவிர்த்து உள்ளது.

கனடாவில் இருந்து நாடு கடத்துவதை கைவிட்டு, பின் தனது வான்பரப்பில் வைத்து அமெரிக்கா மீண்டும் கைது செய்யக்கூடும் என்று Meng தரப்பு கருத்தியிருக்கக்கூடும்.

வழமையான பாதை சுமார் 13:00 மணித்தியாலங்களை மட்டுமே எடுத்திருக்கும் என்றாலும், சுற்று பாதையால் சென்றதால் Meng சென்ற விமானம் 14:22 மணி நேரத்தை எடுத்துள்ளது.

அதேவேளை சீனாவில் விடுதலை செய்யப்பட்ட Kovrig, Spavor ஆகிய இரண்டு கனேடியர்களும் கனடாவின் Calgary விமான நிலையத்தில் இறங்கி உள்ளனர்.