Miami மாடி உடைந்து வீழ்ந்தது, 99 பேர் தொலைவு

Miami மாடி உடைந்து வீழ்ந்தது, 99 பேர் தொலைவு

அமெரிக்காவின் Florida மாநிலத்தில் உள்ள Miami நகரில் உள்ள மாடிவீடுகளை கொண்ட 12 மாடி கட்டிடத்தின் அரைப்பகுதி இன்று வியாழன் அதிகாலை 1:30 மணியளவில் உடைந்து வீழ்ந்துள்ளது.

இதுவரை ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. மேலும் 99 பேர் எங்கே என்று அறியப்படவில்லை. அதேவேளை 102 பேர் தப்பி அல்லது காப்பாற்றப்பட்டு உள்ளனர்.

1981ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மாடியில் உள்ள 135 வீடுகளில், 55 வீடுகள் உடைந்து வீழ்ந்து உள்ளன. இந்த மாடி 8777 Collins Avenue என்ற கடலோர முகவரியில் உள்ளது.

வீழ்ச்சி அடையாத மிகுதி அரைப்பங்கும் ஆபத்தில் உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

கட்டிடம் உடைந்து வீழ்ந்ததற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. Miami பகுதி நிலம் மெல்ல கீழ் இறங்குவதும் அறிந்தே.