Microsoft Bill Gates, Melinda 27 ஆண்டுகளின் பின் விவாகரத்து

Microsoft Bill Gates, Melinda 27 ஆண்டுகளின் பின் விவாகரத்து

Microsoft நிறுவனத்தை ஆரம்பித்த Bill Gates (வயது 65) மற்றும் அவரின் மனைவி Melinda Gates இருவருக்கும் இடையிலான 27 ஆண்டு விவாகம் விவாகரத்தில் முடிகிறது. இருவரும் விவாகரத்துக்கு இணங்கி உள்ளனர். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உண்டு. இவர்கள் 1994ம் ஆண்டு விவாகம் செய்து இருந்தனர்.

தற்போது Bill Gates உலகில் 4வது பெரிய செல்வந்தர் என்றாலும், நீண்ட காலமாக இவரே உலகின் முதலாவது செல்வந்தராக இருந்தவர். 1995 முதல் 2010 வரையும், பின் 2013 முதல் 2017 வரையும் இவரே உலகின் முதலாவது செல்வந்தர். தற்போது இவரிடம் $145 பில்லியன் சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இருவரும் “we no longer believe we can grow together as a couple in the next phase of our lives” என்று Twitter மூலம் தெரிவித்து உள்ளனர்.

இவர்களின் சொத்துக்கள் சில Bill and Melinda Gates Foundation மூலம் பொது சேவைகளுக்கு செலவிடப்படுகின்றன. வறிய நாடுகளுக்கு கரோனா தடுப்பு மருந்து வழங்குவதிலும் இந்த நிதியம் பங்கு கொண்டுள்ளது. இந்த முயற்சிக்கு மட்டும் $1.75 வழங்கப்பட்டு உள்ளது.