Mother தெரேசா அமைப்பின் வங்கி கணக்குகள் முடக்கம்

Mother தெரேசா அமைப்பின் வங்கி கணக்குகள் முடக்கம்

Mother தெரேசா அமைப்புக்கு சொந்தமான வங்கி கணக்குகள் சிலவற்றை இந்திய மத்திய அரசு முடக்கி உள்ளது. அதேவேளை இந்திய இஸ்லாமியருக்கு எதிராக இயங்கி வந்த ஆளும் பா. ஜ. கட்சி வன்முறை குழுக்கள் தற்போது கிறிஸ்தவர்கள் மீதும் வன்முறையை ஆரம்பித்து உள்ளன.

Mother தெரேசாவினால் 1950ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட Missionaries of Charity (MoC) சுமார் 3,000 பெண் துறவிகளை கொண்டு வறியவர்களுக்கான உணவு விடுதிகள், பாடசாலைகள், அநாதை சிறுவர்களுக்கு தங்குமிட வசதிகள் ஆகியவற்றை செய்து வருகின்றது.

Foreign Contribution Regulation Act (FCRA) என்ற சட்டத்தின் கீழேயே மேற்படி வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டு உள்ளது. அதனால் வெளிநாடுகளில் இருந்துவரும் நன்கொடைகள் முடங்கி உள்ளன.

கடந்த சில தினங்களாக நத்தார் பண்டிகை கொண்டாடும் கிறீஸ்தவர் மீதும் பா. ஜ. ஆதரவுடன் இயங்கும் இந்துவாதிகள் வன்முறையை திணித்து இருந்தனர். பா. ஜ. ஆட்சியில் உள்ள உத்தரபிரதேசம்,  குஜராத் ஆகிய மாநிலங்களிலிலேயே மேற்படி வன்முறைகள் இடம்பெறுள்ளன.

Mother தெரேசா 1997ம் ஆண்டு மரணமாகி இருந்தார்.

சுமார் 1.37 பில்லியன் மக்களை கொண்ட இந்தியாவில் சுமார் 2.3% மட்டுமே கிறீஸ்தவர்கள்.