Nanjing பல்கலைக்கழகத்தில் வெடிப்பு விபத்து

Nanjing பல்கலைக்கழகத்தில் வெடிப்பு விபத்து

சீனாவின் பிரபல பல்கலைக்கழகமான நான்ஜிங் (Nanjing) பல்கலைக்கழகத்தின் ஆய்வுகூடம் ஒன்றில் இன்று ஞாயிறு இடம்பெற்ற வெடிப்பு விபத்துக்கு குறைந்தது 2 பேர் பலியாகியும் 9 பேர் காயமடைந்து உள்ளனர்.

அமெரிக்காவின் Stanford பல்கலைக்கழகத்தின் Hoover Institution என்ற ஆய்வு அமைப்பு நான்ஜிங் பல்கலைக்கழகத்தை 7 சீன தேசிய பாதுகாப்பு மகன்களில் ஒன்று (one of the seven sons of national defense) என்று விபரித்து இருந்தது. அதாவது இந்த ஆய்வுகூடம் சீன பாதுகாப்பு ஆயுத ஆய்வுகளில் முன்னணியில் உள்ள ஒன்று.

இந்த நிலையம் அணுசக்தி பொருட்கள் (nuclear energy equipment materials), energy conversion போன்ற தொழில்நுட்பங்களை கையாளும் ஆய்வுகூடம். இங்கு ஹெலி ஆய்வுகளும் இடம்பெறும்.

சீன பாதுகாப்பும் பிரிவுகளும் இங்கு தமது ஆய்வுகளை செய்வதுண்டு. இந்த ஆய்வுகூடம் சீனாவின் aerospace ஆய்வில் பிரதானமானது.

தென் தலைநகர் (南/nan=south, 京 /jing=capital) என்று அழைக்கப்படும் Nanjing சீன வரலாற்றில் பிரதான இடத்தை கொண்டது. இங்கு பல பல்கலைக்கழகங்கள் உண்டு. தற்போதைய தலைநகர் Beijing வடக்கு தலைநகர் என்று பொருள்படும் (北/bei=north, 京/jing=capital)