NATO படைபலம் அதிகரிப்பு

NATO

NATO தனது rapid response படை எண்ணிக்கையை இரண்டு மடங்காக அதிகரிக்கவுள்ளதாக அதன் செயலாளர் Jens Stoltenberg கூறியுள்ளார். அதன்படி தற்போது 20,000 ஆகவுள்ள rapid response படை எண்ணிக்கை விரைவில் 40,000 ஆக அதிகரிக்கப்படவுள்ளது. அத்துடன் இந்த rapid response படை 48 மணித்தியாலத்துள் எந்தவொரு களத்துக்கும் நகரக்கூடியதாகவும் இருக்கும்.
.
இந்த படை அதிகரிப்பு NATO வின் கிழக்கு மற்றும் தெற்கு எல்லைகளை நோக்காக கொண்டது. அதாவது இந்த அதிகரிப்பானது அண்மைய காலங்களில் ரஷ்யாவுடன் ஏற்பட்ட நெருக்கடிகளை பொருட்டாக கொண்டது.
.
இரண்டு புதிய படை பிரிவுகள் உருவாக்கப்பட்டு Hungary மற்றும் Slovakia ஆகிய நாடுகளின் நிறுத்தப்பட உள்ளன. இவ்வாறானா வேறு 6 குழுக்கள் ஏற்கனவே Estonia, Latvia, Lithuania, Poland, Bulgaria, Romania ஆகிய நாடுகளில் உள்ளன.
.
அடுத்த மாதம், சுமார் 10 வருடங்களுக்கும் மேலான காலத்தின் பின், 30 இக்கும் மேற்பட்ட NATO நாடுகள் பெரும் இராணுவ பயிற்சி ஒன்றை செய்யவுள்ளன. Exercise Trident Juncture என்ற இந்த பயிற்சி 30,000 படைகளை கொண்டிருக்கும். இது Spain, Portugal, Italy ஆகிய நாடுகளில் நடைபெறும்.
.

அதேவேளை ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கைகளை சிரியாவில் அதிகரித்துள்ளது. புதன் கிழமை இரவு ரஷ்யா கஸ்பியன் கடலில் நிலை கொண்டுள்ள தனது கடல்படை கப்பல்களில் இருந்து 26 ஏவுகணைகளை 1500 km  தொலைவில் உள்ள சிரியாவின் அரச எதிர்ப்பு குழுக்கள் மீது ஏவியுள்ளது. ஈரான் ஒரு ரஷ்யா நட்பு நாடு என்றபடியால், ஏவுகணைகள் அந்நாட்டின் மேலால் சென்றதையிட்டு ஈரான் கவலை கொள்ளவில்லை.
.