NATO மரண படுக்கையில், கூறுவது Macron

NATO

NATO அமைப்பு மூளை மரணித்த நிலையில் உள்ளது (brain dead) என்று கூறியுள்ளார் பிரான்சின் சனாதிபதி மக்றான் (Emmanuel Macron).
.
அமெரிக்காவின் ரம்ப் தலைமையிலான ஆட்சி NATO மீது அவநம்பிக்கை கொண்டுள்ளதே மக்றானின் விசனத்துக்கு முக்கிய காரணம்.
.
NATO நாடுகள் அவற்றின் அங்கத்துவ நாடுகளின் பாதுகாப்புக்கு வருமா என்பதுவும் சந்தேகமே என்றுள்ளார் மக்றான். NATO அங்கத்துவ நாடுகளுக்கு அறிவிக்காது சனாதிபதி ரம்ப் சிரியாவில் இருந்து வெளியேறியதும் பிளவுக்கு உதாரணமாக காட்டப்பட்டுள்ளது.
.
ஆனால் ஜேர்மனியின் தலைவர் மேர்கல் ( Angela Merkel) மக்றானின் சொற்கள் கடுமையானவை என்றும் தனது கருத்து அப்படி அல்ல என்றும் கூறியுள்ளார்.
.
அதேவேளை NATO அணியின் எதிரியான ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் Maria Zakharova மக்றானின் சொற்கள் உண்மையானவை என்றுள்ளார்.
.
NATO நாடுகளில் ஒன்றான துருக்கி ரஷ்யாவுடன் தனது நெருக்கத்தை வலுப்படுத்தி வருகிறது.
.