NSG இணைவுக்கு சீனாவின் ஆதரவை நாடும் இந்தியா

NSG

1970 ஆம் ஆண்டளவில் அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, பிரான்ஸ், சீனா ஆகிய ஐந்து அணு ஆயுதங்களை கொண்ட நாடுகள், மேலும் நாடுகள் அணு ஆயுதங்களை கொள்வதை தடுக்க NPT (Non-Proliferation Treaty) என்ற உடன்படிக்கையை உருவாக்கின. அந்த உடன்படிக்கையின்படி மேற்கூறிய 5 நாடுகள் தவிர்ந்த வேறு எந்த நாடும் அணு ஆயுதங்களை கைக்கொள்ள முடியாது. இந்த கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்ளாத இந்தியா, பாகிஸ்தான் போன்ற சில நாடுகள் NPTயில் ஒப்பமிட மறுத்து, பதிலாக தமது அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய முனைந்தன.
.
1974 ஆம் ஆண்டில் இந்தியா தனது அணு குண்டை வெடிக்க வைத்தபின், அதற்கு எதிராக உருவாக்கப்பட அமைப்பே NSG (Nuclear Suppliers Group). இந்த அமைப்பு NPTயில் ஒப்பமிட்டு, NSGயில் அங்கத்துவம் பெற்ற நாடுகள் மட்டும் தம்முள் அணு ஆயுதங்களுக்குள் உட்படாத, அணு மின் உற்பத்தி போன்ற பெதுமக்களுக்கு பயன்படக்கூடிய அணு சம்பந்தமான பொருட்களையும், சேவைகளையும் பெற்றுக்கொள்ளவும், விற்பனை செய்யவும் வழி செய்தது.
.
NSG அங்கத்துவத்தின் மூலம் பெரும் பயன்களை அடையாளம் என்று கருதிய இந்தியா, இப்போது NSG அங்கத்துவத்தை NPTயின் ஒப்பமிடாமலேயே பெற விரும்புகிறது. அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் உட்பட எல்லா மேற்கு நாடுகளும், ரஷ்யாவும் இந்தியாவுக்கு இந்த விசேட சலுகையை வழங்கி, NPTயில் ஒப்பமிடாது, NSG யின் இணைய அனுமதி வழங்க முன்வந்துள்ளன.
.
ஆனால் அது உடன்படிக்கைக்கு முரண் என்று கூறி இந்தியாவுக்கான விசேட சலுகையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது சீனா. அத்துடன் NPT யில் ஒப்பமிடாத, அணு ஆயுதங்கள் கொண்ட மற்றுமோர் நாடான பாகிஸ்தானும் NSG யில் இணைய முனைகிறது.
.
சீனா ஒரு நிரந்தர உறுப்பினர் ஆனபடியால், சீனாவின் அனுமதி இன்றி இந்தியாவை NSG யில் இணைக்க முடியாது. அதனால் சீனாவின் ஆதரவை பெற பேச்சுசுவார்த்தையில்  ஈடுபட்டு உள்ளது இந்தியா.

.