Paradise Papers விவகாரம், பல புள்ளிகள் முழிப்பு

ICIJ

சிறிது காலத்துக்கு முன் Panama Papers பகிரங்கப்படுத்திய வரி செலுத்தலை தவிர்க்கும் நோக்குடன் செய்யப்பட்ட வருமான மறைப்பு உண்மைகள் பலரை சிக்கலுக்கு உள்ளாக்கி இருந்தது. அதற்கும் மேலான அளவில் பலரை இப்போது சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது Paradise Papers.
.
எலிசபெத் இராணி, பிரபல பாடகர் Bano, அமெரிக்காவின் தற்போதைய Secretary of Commerce Wilbur Ross, Formula One காரோட்ட வீரர் Lewis Hamilton, ஜெர்மனியின் முன்னாள் chancellor Gerhard Schroder, கொலம்பியாவின் ஜனாதிபதி Juan Manuel, பிரபல பாடகி மடோனா போன்ற பலரும் இம்முறை சிக்கலில் மாட்டி உள்ளனர்.
.
Apple, Nike, Uber, facebook போன்ற பல நிறுவனங்களும் இந்த சிக்கலில் மாட்டி உள்ளன.
.
Paradise Paper சுமார் 13.4 மில்லியன் ஆவணங்களை பகிரங்கம் செய்துள்ளது. அதில் சுமார் அரை பங்கு Appleby என்ற சட்ட நிறுவனம் ஒன்றில் இருந்தே எடுக்கப்பட்டுள்ளது. 1898 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் British Virgin Island, Cayman Island, Mauritius, Seychelles போன்ற பல இடங்களில் கிளைகளை கொண்டுள்ளது.
.

iPhone தயாரிப்பாளரான Apple நிறுவனம் மட்டும் சுமார் $128 பில்லியன் இலாபத்தை வெளிநாடுகளில் ஒளித்து வைத்துள்ளதாம். இந்த இலாபத்தை அமெரிக்காவுக்கு எடுத்துவரும்போது Apple சுமார் 35% பெறுமதியை வரியாக செலுத்த வேண்டியிருக்கும்.
.