Plutoவை அண்மிக்கும் NASAவின் New Horizons

Pluto

சூரிய மண்டலத்தின் எல்லையில் இருக்கும் புளுட்டோவை (Pluto) படம் பிடிக்க 2006 ஆம் ஆண்டில் NASAவினால் New Horizon என்ற விண்கலம் ஏவப்பட்டு இருந்தது. சுமார் 9.5 வருடங்களில் 4.8 பில்லியன் km தூரம் பயணித்த அக்கலம் இன்று புளுட்டோவுக்கு அண்மையாக, 12,500 km தூரத்தில் செல்கிறது. அப்போது அதன் வேகம் 45,000 km/h.
.
மேலும் சில நாட்களில் இந்த கலம் புளுட்டோவை படம் பிடித்து NASAவுக்கு அனுப்பும்.
.
புளுடோவுக்கு Charon, Styx, Nix, Hydra, Kerberos என 5 சிறிய சந்திரன்கள் உண்டு. இது தன்னை தானே சுற்ற பூமியின் நாட்களைப்போல் 6.5 நாட்கள் எடுக்கும். அத்துடன் இதன் வருடம் ஒன்று, அதாவது இது சூரியனை ஒரு தடவை சுற்ற எடுக்கும் காலம் பூமியின் வருடத்தின் 248 மடங்காகும்.
.
NewHorizon
.
Nuclear சக்கிதியில் இயங்கும் இந்த கலம் 2030 ஆம் ஆண்டுவரை பயணிக்கும். அப்போது இது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள தூரத்தைப்போல் 100 மடங்கு தூரத்தில் இருக்கும்.
.

இந்த செயல்பாட்டுக்கு சுமார் U$720 மில்லியன் செலவாகி இருந்தது.