Putin, Xi யுடன் கிம் நெருக்கம், ரம்புக்கு அழுத்தம்

NorthKoreaTest

ரஷ்ய ஜனாதிபதி பூட்டின் (Putin) மற்றும் சீன ஜனாதிபதி சி ஜின்பிங் (Xi JinPing) ஆகியோருடன் நெருக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் வடகொரிய தலைவர் கிம் அமெரிக்க ஜனாதிபதி ரம்புக்கு அரசியல் அழுத்தம் வழங்கியுள்ளார்.
.
நேற்று வியாழன் கிம் ரஷ்யாவின் தூரக்கிழக்கு நகரான Vladivostok சென்று பூட்டினை சந்தித்து இருந்தார். இரு தரப்பும் பேச்சுக்கள் நலமாக முடிந்தன என்று கூறியிருந்தன.
.
பின்னர் பெய்ஜிங் சென்ற பூட்டின் சீன ஜனாதிபதி சியை சந்தித்து வடகொரியா தொடர்பாக உரையாடி உள்ளார். இருவரும் வடகொரியா விசயத்திலும், வெனிசுவேலா விசயத்திலும் இணைந்து செயல்பட இணங்கி உள்ளனர். ஐ.நா. வுக்கும் இந்த விசயத்தை எடுத்து செல்ல இருவரும் இணங்கி உள்ளனர்.
.
ரஷ்ய, சீன தலைவர்கள் வடகொரியா மற்றும் வெனிசுவேலா விசயங்களில் இணைந்து செய்லபடுவது அமெரிக்காவின் ரம்ப் தலைமைக்கு இடராக அமைத்துள்ளது. இதற்கு முன்னர் கிம் ரம்புடன் சிங்கப்பூர், ஹனோய் ஆகிய இடங்களில் சந்தித்து இருந்தார். அந்த சந்திப்புகள் பயன் எதையும் வழங்கவில்லை.
.