Raqqa மீட்ப்பில் 1,600 பொதுமக்கள் பலி

Iraq

IS குழுவிடம் இருந்து ராக்கா (Raqqa) என்ற ஈராக்கிய என்ற நகரை மீட்க அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் மேற்கொண்ட விமான மற்றும் எறிகணை தாக்குதல்களுக்கு சுமார் 1,600 பொதுமக்கள் பலியாகி இருந்ததாக Amnesty போன்ற அமைப்புகள் கூறுகின்றன. இந்த அமைப்புகளின் விசாரணை அங்கு இடம்பெற்ற 200 தாக்குதல்களுக்கு குறைந்தது 1,000 பொதுமக்கள் பலியாகி உள்ளனர் என்கிறது.
.
ஆனால் அமெரிக்கா தமையிலான இராணுவ அணி தாம் 318 பொதுமக்களை மட்டுமே தவறுதலாக பலியாக்கியதாக கூறியுள்ளது.
.
2014 ஆண்டு முதல் அமெரிக்கா தலைமையிலான இராணுவ அணி சுமார் 34,000 தாக்குதக்கலை ஈராக்-சிரியா பகுதிகளில் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல்களின் போது சுமார் 11,000 கட்டிடங்களும் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
.
ராக்கா நகரமே IS கையில் இருந்து மீட்கப்பட்ட கடைசி நகரமாகும். இந்த நகரத்தையே IS தனது தளமாக பயன்படுத்தி வந்துள்ளது.
.
Amnesty அதிகாரி Donatella Rovera தனது கூற்றில் “பல விமான தாக்குதல்கள் தவறான குறியை கொண்டவை, எறிகணை தாக்கல்கள் கண்மூடித்தனமானவை” என்றுள்ளார.

.