RCEP சுதந்திர வர்த்தக வலயம், இந்தியா வெளியே?

ASEAN

2012 ஆம் ஆண்டு புரூணை, கம்போடியா, இந்தோனேசியா, லஓஸ், மலேசியா, பர்மா, பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்னாம் ஆகிய 10 ASEAN (Association of Southeast Asian Nations) நாடுகளும் சீனா, ஜப்பான், இந்தியா, தென்கொரியா, அஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகிய 6 நாடுகளும் இணைந்து RECP (Regional Comprehensive Economic Partnership) என்ற சுதந்திர வர்த்தக வலயத்தை உருவாக்க முயற்சி எடுத்தன.
.
அந்த முயற்சி இன்று நவம்பர் 2 முதல் 4 வரை தாய்லாந்தில் இடம்பெறும் வருடாந்த ASEAN மாநாட்டில் முற்று பெறலாம் என்று கருதப்படுகிறது. எல்லா நாடுகளும் இறுதி உடன்படிக்கைக்கு தயார் என்றாலும், இந்தியா சற்று பின்வாங்குகிறது. அதனால் இந்தியா இன்றி RCEP நடைமுறைக்கு வரும் சாத்தியமும் உண்டு.
.
இறுதிவரை மற்றைய 15 நாடுகளும் தாம் இந்தியாவையும் இணைக்க முடிந்ததை செய்வோம் என்றுள்ளன.
.
சுமார் 3.4 பில்லியன் மக்களை கொண்ட இந்த 16 நாடுகளுக்குள் தற்போது உலகின் 39% ($50 டிரில்லியன்) வர்த்தகம் அடங்கி உள்ளது. இந்த வர்த்தக வலயம் 2050 ஆம் ஆண்டளவில் உலகின் 50% வர்த்தகத்தை கொண்டிருக்கும் என்றும் கருதப்படுகிறது.
.
ரம்புக்கு முன் அமெரிக்காவின் தலைமையில், கனடா, மெக்ஸிகோவை உள்ளடக்கி உருவாக இருந்த Trans-Pacific Partnership (TPP) என்ற வர்த்தக வலயத்துக்கு போட்டியாகவே RCEP உருவாகி  இருந்தது. ஆனால் பின்வந்த ரம்ப் TPP வர்த்தக வலய முயற்சியில் இருந்து வெளியேறி இருந்தார்.
.