Robert Levinson விவகாரத்தால் திண்டாடும் CIA

RobertLevinson

1948 ஆம் ஆண்டு North Carolina வில் பிறந்த அமெரிக்கர் Robert Levinson ஒரு முன்னாள்  FBI (Federal Bureau of Investigation) ஊழியர். இவர் ஒரு CIA உளவு வேலை சம்பந்தமாக ஈரானை நோக்கி சென்றுள்ளார். இவரை இறுதியாக அமெரிக்கா தரப்பு தொடர்பு கொண்டது பங்குனி மாதம் 2007 ஆம் ஆண்டு. அன்றில் இருந்து இன்றுவரை உறவினரோ அல்லது அமெரிக்க அதிகாரிகளோ தொடர்பு கொள்ள முடிந்திருக்கவில்லை. அமெரிக்க அதிகாரிகள் இவரின் CIA மறுத்து இவர் தனது சொந்த விடயங்கள் காரணமாகவே ஈரான் சென்றதாக கூறுகிறது. ஆனால் The Associated Press மற்றும் The Washington Post பத்திரிகைகளின் கருத்துப்படி இவரின் வீட்டாருக்கு அமெரிக்க அரசு $2.5 மில்லியன் கொடுத்து அவர்களை மௌனமாக இருக்க கேட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டில் இவர் ஈரானுக்கு சொந்தமான Kish தீவுக்கு சென்றுள்ளார். The New York செய்தியின்படி NBC செய்தி தயாரிப்பாளர் Ira Silverman, Robert Levinson ஐ ஈரானியர் Dawud Salahuddin இற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். Dawud இன் தொடர்புமூலம் உளவு வேலைகளை நடைமுறைப்படுத்துவதே நோக்கம் என கருதப்படுகிறது. ஆனால் இந்த உளவு வேலை தோல்வியில் முடிந்துள்ளது.

அதேவேளை இந்த Dawud Salahuddin என்பவர் David Theodore Belfield என்ற பெயருடன் North Carolina வில் பிறந்த அமெரிக்கர். பின்னர் இவர் இஸ்லாத்துக்கு மாறியிருந்தார். இவரே 1980 ஆம் ஆண்டில் ஈரானின் ஷாவின் (Shah) பேச்சாளர் Ali Tabatabai வை அவரின் அமரிக்க வீட்டில் வைத்து சுட்டு கொன்றுள்ளார். அதன் பின் Dawud Salahuddin ஈரான் சென்று வாழ்ந்து வருகின்றார்.

Robert Levinson நிலைவரம் பற்றி அறிய போராடுகிறது இவரின் குடும்பம். இவர்கள் இதற்கென http://www.helpboblevinson.com ஐயும் இயக்குகிறார்கள்.

படம்: www.helpboblevinson.com