Ryanair விமானியை ஏமாற்றி பயணியை Belarus கைது

Ryanair விமானியை ஏமாற்றி பயணியை Belarus கைது

கிரேக்கத்தின் Athens நகரில் இருந்து Lithuania நாட்டின் Vilnius நகர் நோக்கி சென்ற Ryanair விமானத்தை (Flight FR4978) Belarus படையினர், அதில் குண்டு இருப்பதாக பொய் கூறி, தரை இறக்கி, அதில் பயணித்த பத்திரிகையாளர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

Belarus நாட்டின் MiG-29 யுத்த விமானம் ஒன்று 171 பயணிகளுடன் Belarus வழியே சென்ற மேற்படி Ryanair விமானத்தை Belarus தலைநகரில் உள்ள Minsk விமான நிலையத்தில் தரையிறங்கி உள்ளது. ஆனால் அந்த விமானத்தில் குண்டுகள் எதுவும் இருந்திருக்கவில்லை.

விமானம் திசை திருப்பப்பட்ட நேரத்தில் அது உண்மையில் போகும் இடமான Vilnius விமான நிலையத்துக்கு அருகிலேயே இருந்துள்ளது. ஆனாலும் அது தொலைவில் இருந்த Minsk விமான நிலையத்துக்கு எடுத்து செல்லப்படுள்ளது.

1994ம் ஆண்டு முதல், ரஷ்யாவின் ஆதரவுடன், Belarus நாட்டில் சர்வாதிகார ஆட்சி செய்யும் Lukashenko வுக்கு எதிராக, வெளிநாடுகளில் இருந்து ஆக்கங்கள் எழுதும் 26 வயதுடைய Roman Protasevich என்ற பத்திரிகையாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் Nexta என்ற செய்தி நிறுவனத்தை இயக்குபவர்.

பத்திரிகையாளரின் கைதை மேற்கு நாடுகள் வன்மையாக கண்டிக்கின்றன. ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றுள்ளார். பிரான்சின் வெளியுறவு அமைச்சரும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கைதின் பின் ஏனைய பயணிகள் பயணத்தை தொடர அனுமதிக்கப்பட்டனர்.