Samsung இன் காலாண்டு இலாபம் U$6.58 பில்லியன்

தென் கொரியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் (Samsung Electronics Co) தனது 2012 இன் நாலாம் காலாண்டு இலாபம் U$6.58 பில்லியன் என இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இது முன்னைய வருட நாலாம் காலாண்டின் இலாபத்தைவிட 76% அதிகமாகும். இவர்களின் பெரும்பாலான வருமானம் சாம்சங்கின் Galaxy போன்ற smartphone பிரிவில் இருந்தே கிடைத்துள்ளது.

ABI Research இன் கருத்துப்படி உலக smartphone சந்தையின் 30% பங்கை சாம்சங் கொண்டுள்ளது. சாம்சங்கின் இவ்வாறான வளர்ச்சி தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் கடந்த காலாண்டில் சுமார் 63 மில்லியன் smartphone களை விற்பனை செய்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இதே காலத்தில் Apple சுமார் 47.8 மில்லியன் iPhone களை விற்பனை செய்துள்ளது.