Sir Creek பகுதியிலும் இந்தியா, பாகிஸ்தான் முறுகல்

Sir Creek பகுதியிலும் இந்தியா, பாகிஸ்தான் முறுகல்

காஸ்மீர் பகுதியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிக்கொள்வது அதிகம் அறியப்பட்டாலும் அரபு கடலோரம் உள்ள Sir Creek பகுதியிலும் இந்த இரண்டு நாடுகளும் தற்போது முறுகி வருகின்றன. உண்மையில் Sir Creek பகுதி முரண்பாடு காஸ்மீர் முரண்பாட்டுக்கு, பாகிஸ்தான் பிறப்புக்கு முன்னையது.

வடக்கே காஸ்மீரில் இருந்து தெற்கு வரை இந்திய-பாகிஸ்தான் எல்லைகள் குறிப்பிடப்பட்டாலும் அரபு கடல் அருகே பிரித்தானிய ஆக்கிரமிப்பு காலத்திலேயே எல்லை தெளிவாக குறிப்பிடப்படவில்லை. அப்பகுதியிலேயே தற்போது முறுகல் தோன்றி உள்ளது.

Ban Ganga என்று முன்னர் அழைக்கப்பட்டு பின் பிரித்தானியரால் Sir Creek என்று அழைக்கப்படும் இந்த முகத்துவாரம் இந்தியாவின் குயாரத் மாநிலத்தையும் பாகிஸ்தானின் Sindh மாநிலத்தையும் தொடும் அரபு கடலோர Rann of Kutch பகுதி Border Pillar இலக்கம் 1175 க்கு தெற்கே தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

1914ம் ஆண்டு அக்கால பிரித்தானிய அரசும் இந்த முரண்பாட்டை தெளிவாக திருத்த தவறி இருந்தது.

தற்போது மேற்படி இரண்டு நாடுகளும் இங்கே தமது படைகளை குவித்து வருகின்றன.

அக்டோபர் 2ம் திகதி இந்திய பாதுகாப்பு அமைச்சரும், 3ம் திகதி இந்திய இராணுவ ஜெனரல் Upendra Dwivedra வும் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.