$5 பில்லியன் குற்றப்பணம் செலுத்தும் S&P

அமெரிக்க அரசு S&P (Standard and Poor”s) என்ற credit rating நிறுவனத்தை $5 பில்லியன் குற்றப்பணம் செலுத்துமாறு பணித்துள்ளது. இந்த நிறுவனம் பல தரக்குறைவான சொத்து நிறுவனங்களுக்கு அதியுயர் மதிப்பீடான AAA ஐ வழங்கியதால், பல முதலீட்டாளர்கள் அந்த நிறுவனங்களில் முதலீடு செய்து பின் 2008-2009 களில் பாரிய நட்டத்தை அடைந்திருந்தனர். அமெரிக்க மத்திய அரசு மட்டுமன்றி, 13 மாநில அரசுகளும் S&P  இக்கு எதிராக மேலும்பல வழக்குகளை தொடர்ந்துள்ளன. உதாரணமாக கலிபோர்னிய மாநிலம் $4 பில்லியன் நட்டஈடு கேட்டுள்ளது.

2008-2009 களில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளுக்கு இவர்களும் பிரதான காரணம். ஒரு நிறுவனத்தின் பொருளாதார நடவடிக்கைகள், சொத்துகள், கணக்கியல் போன்றவற்றை ஆராய S&P U$ 750,000 வரை கட்டணமாக பெறும். அத்துடன் ஆய்வை துரிதப்படுத்த விரும்பின் S&P இக்கு மேலும் $50,000 செலுத்துதல் அவசியம். இவ்வாறு இவர்கள் பணம் பெற்று அதியுயர் மதிப்பான AAA வழங்கிய பல பாரிய நிறுவங்கள் பல பின்னர் பில்லியன்கள் அளவில் நட்டம் அடைந்திருந்தன. அந்த நிறுவனங்களில் பல பின்னர் அமெரிக்க அரசின் உதவியுடன் காப்பாற்றப்பட்டன.

S&P நாடுகளையும் கணிப்பிட்டு மதிப்பு வழங்குவதுண்டு. அண்மையில் அமெரிக்காவுக்கும் இவர்கள் AAA இற்கும் குறைவான மதிப்பீடு வழங்கி இருந்தது.