Texas தேவாலயத்தில் சூடு, 26 பேருக்குமேல் பலி

Texas

இன்று ஞாயிரு அமெரிக்காவின் ரெக்சஸ் (Texas) மாநிலத்து சன் அன்ரோனியோ (San Antonio) நகருக்கு அண்மையில் உள்ள Sutherland Springs என்ற சிறு நகரில் உள்ள First Baptist Church of Sutherland Springs என்ற தேவாலயxதில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலுக்கு 26 பேருக்கு மேல் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
.
மேலும் 20 பேர் காயப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. Albert Gamez என்ற அதிகாரி CNN செய்தி நிறுவனத்துக்கு கூறிய கருத்துப்படி துப்பாக்கிதாரியை போலீஸ் பின்தொடர்ந்தனர் என்றும், பின்னர் துப்பாக்கிதாரியும் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. துப்பாக்கிதாரி தற்கொலை செய்தாரா அல்லது போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டாரா என்பது தெளிவாகவில்லை.
.
2000 ஆம் ஆண்டு கணிப்புகளின்படி இந்த சிறு நகரில் 362 மக்கள் மட்டுமே வாழ்ந்துள்ளனர்.
.
இந்த துப்பாக்கி தாக்குதல் உள்ளூர் நேரப்படி காலை 11:20 மணியளவில் இடம்பெற்றது என்று கூறப்படுகிறது. மரணித்தோருள் 5 வயது முதல் 73 வயதானோர் அடங்குவர். மரணித்தோருள் 14 வயதுடைய அந்த தேவாலய Pastorரின் மகளும் அடங்குவார்.
.
துப்பாக்கிதாரி சுடுவதை கண்ட பொதுமகன் ஒருவர், தனது துப்பாக்கியால் அவரை நோக்கி சுட்டு இருக்கிறார் (அமெரிக்காவில் பொதுமக்களும் துப்பாக்கி வைத்திருக்க உரிமை உண்டு). அதன் பின் துப்பாக்கிதாரி தப்பி ஓடியுள்ளார். துப்பாக்கிதாரி சுமார் 25 வயதுடைய வெள்ளை இனத்தவர் என்றும் கூறப்பட்டு உள்ளது.
.