The Lancet: ரம்ப் பொய்கதை கூறி WHO வை தாக்குகிறார்

Trump

தனது தவறுகளை மற்றவர்கள் மீது திணித்து தப்பிக்கொள்ளும் இயல்பு கொண்ட ரம்ப் மீண்டும் ஒருமுறை அவ்வகை செயலை செய்து அகப்படுக்கொண்டார். ஆரம்ப காலங்களில் கரோனா விசயத்தில் புத்திசாலிதமாக செயல்பட்டு முற்காப்பு நடவடிக்கைகளை செய்ய தவறிய ரம்ப், அமெரிக்காவில் 1.5 மில்லியன் மக்கள் கரோனா தொற்றியும், 90,000 மக்கள் பலியாகியும் உள்ள நிலையில், WHO மீது பாய்கிறார் ரம்ப்.
.
சில நாட்களுக்கு முன் ரம்ப் WHO வுக்கு எழுதிய மிரட்டல் கடிதம் ஒன்றில், தனது வாதத்தை உறுதிப்படுத்த, 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவ வெளியீடான The Lancet வெளியிட்ட ஆய்வையும் WHO உதாசீனம் செய்துள்ளது என்று கதை விட்டுள்ளார். அவரின் கடிதம் “credible reports of the virus spreading in Wuhan in early December 2019 or even earlier, including reports from The Lancet medical journal”என்றுள்ளது.
.
இதை அறிந்த பிரித்தானியாவை தளமாக கொண்ட The Lancet என்ற மருத்துவ வெளியீடு தாம் அவ்வாறு 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கரோனா தொடர்பான எந்தவித ஆய்வையும் வெளியிட்டு இருக்கவில்லை என்றுள்ளது. அத்துடன் தமது முதலாவது கரோனா தொடர்பான ஆய்வு 2020 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதியே வெளியிடப்பட்டது என்றும் கூறி உள்ளது.
.
The Lancet தனது கூற்றில் ” Dear President Trump – You cite The Lancet in your attack on WHO. Please let me correct the record. The Lancet did not publish any report in early December, 2019, about a virus spreading in Wuhan. The first reports we published were from Chinese scientists on Jan 24, 2020.” என்றுள்ளது.
.
இந்த முரண்பாடு தொடர்பாக பல செய்தி நிறுவனங்கள் தொடர்புகொண்டபோது வெள்ளை மாளிகை பதிலளிக்க மறுத்து உள்ளது.
.