Tonga வெடிப்பு 500 மடங்கு ஹிரோஷிமா வெடிப்புக்கு நிகர்

Tonga வெடிப்பு 500 மடங்கு ஹிரோஷிமா வெடிப்புக்கு நிகர்

கடந்த சனிக்கிழமை Tonga வில் நீரடி எரிமலை வெடித்து இருந்தது. இதன் வலுவை தற்போது அமெரிக்காவின் NASA தற்போது கணித்துள்ளது. நாசாவின் கணிப்பின்படி Tonga வெடிப்பு இரண்டாம் உலக யுத்த காலத்தில் ஹிரோஷிமா நகரில் போடப்பட்ட குண்டின் வலுவுடன் ஒப்பிடுகையில் குறைந்தது 500 மடங்கு அதிகம் என்று அறியப்பட்டுள்ளது.

இந்த வெடிப்பு 10 மெகா தொன் TNT வெடிமருந்து உருவாக்கும் வெடிப்புக்கு நிகரானது.

1883ம் ஆண்டு இந்தோனேசியாவில் இடம்பெற்ற இயற்கை வெடிப்புக்கு பின் இடம்பெற்ற பாரிய வெடிப்பு இதுவே.

அதேவேளை Vienna வை தளமாக கொண்ட Comprehensive Nuclear Test Ban Treaty Organization (CTBTO) Tonga வெடிப்பின் வலுவை நாசாவின் கணிப்பிலும் அதிகம் என்று கூறியுள்ளது. இந்த அமைப்பு உலகம் எங்கும் 53 detectors கொண்டு அணு பரிசோதனைகள் கண்காணித்து வருகிறது.

1961ம் ஆண்டு சோவியத் யூனியன் 50 மெகா தொன் குண்டை வெடித்து பரிசோதித்து இருந்தது.