Ukraine வழியில் அழியும் Belarus?

Ukraine வழியில் அழியும் Belarus?

கடந்த சில ஆண்டுகளாக மேற்கு நாடுகளுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான முரண்பாடுகளுக்குள் அகப்பட்டு அழிந்த நாடு யுக்ரைன் (Ukraine). இறுதியில் கிரைமியாவை (Crimea) ரஷ்யா கைப்பற்றி, கிழக்கு  யுக்ரைனை ரஷ்ய மொழி பேசும்  யுக்ரைன்நாட்டவர் கைப்பற்ற  யுக்ரைன் சிதைந்தது. தற்போது அந்நிலை அருகில் உள்ள பெலருசுக்கு (Belarus) ஏற்படலாம் என்று தெரிகிறது.

USSR அழிந்த பின், 1994 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை சனாதிபதி Alexander Lukashenko பெலருசில் ஆட்சியில் உள்ளார். சர்வாதிகாரி போல் செயல்படும் இவரின் ஆட்சியில் பொருளாதாரம் பெரிதும் வளரவில்லை. இவர் ரஷ்ய சார்பு நபர் என்பதால் மேற்கு நாடுகளும் பொருளாதார உறவுகளை ஊக்கிவிக்கவில்லை.

இந்த மாதம் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தேர்தலில் Lukashenko 80.10% வாக்குகளை பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த வாக்கெடுப்பில் எவருக்கும் நம்பிக்கை இல்லை.

இந்த தேர்தலில் போட்டியிட்ட எதிராணிக்காரரான Siarhei Tsikhanouski என்பவர் இறுதி நேரத்தில் (மே 29) சிறையில் அடைக்கப்பட்டார். உடனே அவரின் மனைவி Sviatlana Tsikhanouskaya போட்டியில் இறங்கினார். அவர் 10.12% வாக்குகள் மட்டுமே பெற்றார் என்று அரசு கூறியது.

மனைவி தேர்தலின் பின் லித்துஏனியாவுக்கு (Lithuania) தப்பி ஓடியுள்ளார். ஆனாலும் அவரின் ஆதரவாளர் வீதி போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர்.

NATO தனது படைகளை பெலரசின் மேற்கு பகுதிகளில் குவிகிறது என்று  Lukashenko தற்போது குற்றம் கூறி, தனது படைகளை மேற்கே நகர்த்தி உள்ளார். NATO Lukashenko கூற்றை மறுத்துள்ளது.