UN: அமெரிக்காவின் தாக்குதல் war crime ஆகலாம்

MSF

கடந்த 28 ஆம் திகதி ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் (Kunduz) நகரை அரசபடைகளை விரட்டியபின் தலிபான் கைப்பற்றி இருந்தது. சில நாட்களுள் அந்நகரை, அமெரிக்க விமானப்படை உதவியுடன், ஆப்கானிஸ்தான் படைகள் மீண்டும் கைப்பற்றி இருந்தன. ஆனால் அங்கு மோதல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வந்திருந்தன.
.
உள்ளூர் நேரப்படி இன்று சனிக்கிழமை அதிகாலை 2:15 மணியளவில் அமெரிக்காவின் யுத்த விமானங்கள் போட்ட குண்டுகள் Doctors Without Borders குண்டூஸ் நகரில் நாட்டத்தி வந்த வைத்தியசாலை ஒன்றில் வீழ்ந்ததால் 19 பேர் பலியாகி உள்ளனர். இதில் 12 வைத்திய ஊழியரும், மூன்று சிறுவர் உட்பட 7 நோயாளரும் அடங்குவர் என்கிறது Doctors Without Borders.
.
தமது வைத்தியசாலை அமைவிட விபரங்கள் (coordinates) பல தடவைகள் அமெரிக்கா/NATO படைகளுக்கு கொடுக்கப்பட்டு இருந்தும் இந்த தாக்குதல் இடம்பெற்று உள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்த ஐ.நா. மனித உரிமைகள் பொறுப்பாளர் Zeid Ra’ad Al Hussein, இந்த தாக்குதல் war crime ஆக அமையலாம் என்றுள்ளார் (“If established as deliberate in a court of law, an airstrike on a hospital may amount to a war crime.”)
.

தாம் அந்த இடத்தில் தாக்குதல் நடாத்தியது உண்மைதான் என்ற NATO இதுபற்றி விசாரணை நடாத்துவதாக கூறி உள்ளது.
.