UP முதலமைச்சருடன் மரணவீடு வந்த AC

YogiAC

இம்மாதம் முதலாம் திகதி, காஸ்மீர் பகுதியில், Perm Sagar, Paramjit Singh ஆகிய இரண்டு இந்திய படையினரை கைப்பற்றிய பாகிஸ்தான் இராணுவம் இருவரையும் கொலை செய்திருந்தது. அவர்களின் ஒருவரான Perm Sagar மரண வீட்டுக்கு மே 12 ஆம் திகதி இந்துவாதியான உத்தர பிரதேச முதலமைச்சர் Yogi Adityanath சென்று இருந்தார்.

முதலமைச்சரின் வருகைக்காக இறந்த இராணுவ வீரரின் வீட்டுக்கு குளிரூட்டி (AC) பூட்டி, புதிய இருக்கை (sofa), புதிய மறைவு சேலை (curtain) தூக்கி, புதிய நிலக்கம்பளம் (carpet) விரிக்கப்பட்டதாம். அறைக்கு புதிதாக வர்ணமும் பூசப்பட்டதாம்.
.

முதலமைச்சர் மரண வீட்டில் சுமார் 20 நிமிடங்கள் இருந்துள்ளார். முதலமைச்சர் அந்த மரணித்த சிப்பாயின் வீட்டை விட்டு வெளியேறிய பின் குளிரூட்டி, கம்பளம் எல்லாம் எடுத்து செல்லப்பட்டுள்ளதாம். இதையிட்டு பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு மீண்டும் எடுத்து செல்வது எமது முறைமை (protocol) என்றுள்ளார் ஒரு அதிகாரி.
.