US$179 மில்லியனுக்கு விலைபோன பிக்காசோ ஓவியம்

Picasso

திங்கள் அன்று நியூ யோர்க் நகரில் நடைபெற்ற ஏலம் ஒன்றில் பாப்லோ பிக்காசோவின் (Pablo Picasso) ஓவியமான Women of Algiers US$ 179 மில்லியனுக்கு ($179,365,000.00) விலை போயுள்ளது. இதுவரை அதிகம் விலை கொடுக்கப்பட்ட ஓவியம் இதுவே. இந்த ஓவியம் 1954-55 காலப்பகுதில் வரையப்படதாகும்.
.
இந்த ஓவியத்தை கொள்வனவு செய்த தரப்பு தம்மை பகிரங்கப்படுத்த விரும்பவில்லை என ஏலத்தை நடாத்திய Christie நிறுவனம் கூறியுள்ளது..
.
1881 ஆம் ஆண்டில் ஸ்பெயின் நாட்டில் பிறந்த பிக்காசோ 1973 ஆம் ஆண்டில் பிரான்சு நாட்டில் காலமாகி இருந்தார்.
.

இதற்கு முன் 2013 ஆம் ஆண்டில் Francis Bacon னுடைய ஓவியம் ஒன்று $ 142 மில்லியனுக்கு விலை போயிருந்தது.